Thursday, 7 April 2016

இன்று ஏப்ரல் 07

இந்த ஆண்டு உலகச் சுகாதார நாளின் (2016 ஏப்ரல் 7) நோக்கம், ‘நீரிழிவை வெல்வோம்’.


Wednesday, 6 April 2016

இன்று - ஏப்ரல் 06

முயற்சி என்பது விதை போல..
அதை விதைத்துக் கொண்டே இரு.
முளைத்தால் மரம் - இல்லையேல்
அது மண்ணிற்கு உரம்
- கோ.நம்மாழ்வார்


Monday, 4 April 2016

இன்று - 04.04.2016

குழந்தை களுக்காகவே யுத்தம் செய்தோம்
யுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்
திரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி
- தீபச்செல்வன்


Wednesday, 23 March 2016

இன்று மார்ச் 23


இன்று மார்ச் 22

இன்று (மார்ச் 22) உலக தண்ணீர் நாள்
வளங்களின் தாய் நீர்
நீர் இன்றேல் பார் இல்லை
ஊர் வளம் பெற
பார் வளம் பெற
நீர் வளம் காப்போம்இன்று மார்ச் 22சமகாலத்து அஞ்சலி
வரலாறாகி விட்ட தமிழ்த்திரை உலகின் வரலாற்று ஆசிரியர்
தொடக்கம் என்று ஒன்று இல்லாமல் நடப்பு நிகழ்வுகளும் இல்லை, முடிவும் இல்லை. வாழ்க்கை, சினிமா, அரசியல், தலைவர்கள் என ஒவ்வொரு துறைக்கும் முன்னோடி என்று ஒருவர் இருப்பார். அப்படிப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்தான் பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.
தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று போற்றப்பட்ட, மூத்த பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் நேற்று (21.03.2016) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.
‘பிலிம் நியூஸ்' ஆனந்தன் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் நம் குடும்பம் தெரிவித்துக் கொள்கிறது.


Tuesday, 13 October 2015

புத்தகத் திருவிழாவில் நம் குடும்பம்

புஞ்சைப் புளியம்பட்டியில் நடைபெற்று வரும் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் வருகின்ற 17.10.2015 சனிக்கிழமை ஒருநாள் நிகழ்வு நம் குடும்பத்தின் சார்பாக சிறப்பிக்கப்படவுள்ளது. வாய்ப்பிருக்கும் தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்.
புத்தகத் திருவிழாவில்

புஞ்சைப் புளியம்பட்டியில் நடைபெற்று வரும் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் நம் குடும்பம் விற்பனை அரங்கில் நம் குடும்பம் இதழாசிரியர் ஆ.வர்க்கீஸ். உடன் புத்தகத் திருவிழாவின் அமைப்பாளரும், விடியல் சமூக நல அமைப்பின் செயலருமான திரு.ஜெயகாந்தன் அவர்கள் (வலது). புளியம்பட்டி நேருநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் நல்லாசிரியர் திரு.இ.ஜான்போஸ்கோ அவர்கள் (இடது).


Tuesday, 6 October 2015

அக்டோபர் மாத சிறப்புப் பேட்டிகள்

இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள 9003554227, magazine.nkm@gmail.com. வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புக்கு: tamilnenjam@hotmail.com


Wednesday, 30 September 2015

வளரும் சிற்றிதழ் விருது

கடந்த 20.09.2015 அன்று பரமத்தி வேலூரில் நடைபெற்ற சிகரம் இதழின் 14வது ஆண்டு நிறைவு விழாவில் சிகரம் சார்பாக நம் குடும்பத்திற்கு, வளரும் சிற்றிதழ் எனும் விருது கொடுக்கப்பட்டது. நாங்கள் இலக்கியகத்தின் தலைவர் திரு.செல்மா காமராசன் அவர்கள் கரங்களிலிருந்து நம் குடும்பம் ஆசிரியர் ஆ.வர்க்கீஸ் அவர்கள் விருதைப் பெற்றுக் கொண்டார். நடுவில் சிகரம் இதழின் சிறப்பாசிரியர் திரு.சந்திரா மனோகரன் அவர்கள். அருகில் சிகரம் ஆசிரியர் திரு.அன்புநேசன் அவர்கள். சிகரத்திற்கும், அதன் ஆசிரியர்களுக்கும், நம் குடும்பத்தின் நன்றி கடந்த வணக்கங்கள். தாமதமான செய்தி என்றாலும் நெகிழ்ச்சியான அந்தத் தருணத்தை உறவுகள் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றோம்.Tuesday, 29 September 2015

படுத்துக் கொண்டே ஜெயிப்பவர்

நீ மாற்றுத்திறனாளி இல்லை; பலரையும் மாற்றும் திறனாளி என்று மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்களால் புகழப்பட்டவர். படுத்துக் கொண்டே ஜெயிப்பவர். தனது இடது கையின் ஆட்காட்டி விரலை மட்டுமே அசைக்க முடியும் என்ற நிலையிலும், உலகத்தின் எட்டுத் திக்கும் தனக்கென நண்பர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளவர்; பல்வேறு சமூக அறக்கட்டளைகளையும் ஒருங்கிணைத்து சமூக விழிப்புணர்வுப் பணிகளோடு, குழந்தைகள் மேம்பாடு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைப் போராட்டம், ஈழத் தமிழர்களுக்கான போராட்டம், பசுமை வளர்ப்பு, கண்தான இயக்கம் என இவர் கால் பதிக்காத மன்னிக்கவும் விரல் அசைக்காத களங்களே இல்லை எனலாம்.
தமிழ் இனி மெல்லச் சாகும் எனும் பாரதியின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோர் மத்தியில் மெல்லத் தமிழ் இனி வளரும் என்று தன்னம்பிக்கையோடு சொல்லுகிறவர். அவர்தான் கோவை, காட்டூரில் வசிக்கும் ஜெகதீஸ். அவரது நம்பிக்கைப் பேட்டி இந்த மாத நம் குடும்பம் இதழில்.. வாசிக்கத் தவறாதீர்கள்.

அக்டோபர் மாத நம் குடும்பம் இதழின் முகப்பு அட்டை

அட்டையை அலங்கரிப்பவர் கவிஞர், சமூகப்பணியாளர். திருமதி.சக்திஜோதி அவர்கள்.


Friday, 4 September 2015

வினியோகஸ்தர்கள் தேவை

நம் குடும்பம் இதழ் கிடைக்கும் இடங்கள். மற்ற ஊர்களுக்கும் வினியோகஸ்தர்கள் தேவை. விருப்பம் இருப்போர் தொடர்பு கொள்ளவும். 9003554227. editor.nkm@gmail.com


Thursday, 3 September 2015

செப்டம்பர் மாத நம் குடும்பம்

செப்டம்பர் மாத நம் குடும்பம் இதழ் அஞ்சலில் சேர்க்கப்பட்டு விட்டது. இதழ் கிடைத்தவுடன் உங்கள் விமர்சனங்களைப் பதிவிட மறவாதீர்கள். விமர்சனங்களுக்கு, 

வாட்ஸ் அப் எண் 9003554227
இமெயில் editor.nkm@gmail.com

நம் குடும்பம் மாத இதழின் முகநூல் முகவரி
facebook.com/namkudumbammagazine
நம் குடும்பத்தின் ஒருசில பழைய இதழ்களுக்கு
https://www.scribd.com/Namkudumbam
நன்றி


நம் குடும்பம் இதழுக்கு வளர்ந்து வரும் சிற்றிதழ் விருது

நேற்று இரவு சிகரம் காலாண்டிதழின் ஆசிரியர் திரு.சந்திரா மனோகரன் அவர்கள் அழைத்திருந்தார். சிகரம் இதழின் 14வது ஆண்டு விழாவை முன்னிட்டு நம் குடும்பம் இதழுக்கு ""வளர்ந்து வரும் சிற்றிதழ்'' விருது கொடுக்க இருப்பதாகக் கூறினார். விருது வழங்கும் விழா பரமத்தி வேலூரில் நடைபெறவுள்ளது. 
நம் குடும்பத்தை இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்தமைக்குச் சிகரம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். மிக்க மகிழ்ச்சி. இந்த விருதை நம் குடும்பத்தின் ஆசிரியர் குழுவினர், வாசகர்கள், படைப்பாளர்கள், ஓவியர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், அச்சகத்தார் மற்றும் நம் குடும்பத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பிக்கின்றேன். இவ்விருதானது வருகின்ற 20ம் தேதி (20.09.2015 ஞாயிறன்று) வழங்கப்படவிருக்கின்றது. நம் குடும்பத்தின் உறவுகள் உங்கள் ஒவ்வொருவருக்கும் இதில் பங்குண்டு. எனவே கட்டாயம் வாருங்கள்.Wednesday, 2 September 2015

நல்லாசிரியர் விருதுசத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இருவருக்குத் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
சத்தியமங்கலம் கட்டபொம்மன் நகரில் வசிக்கும், புன்செய் புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஜான் போஸ்கோ அவர்களும், சத்தியமங்கலம், ராஜீவ் நகரில் வசிக்கும், சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.மேரி மெட்டில்டா ராணி (நம் குடும்பத்தின் நண்பர் திரு.ஜோசப் அருமைராஜ் அவர்களின் துணைவியார்) ஆகிய இருவரும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை நம் குடும்பம் வாழ்த்தி மகிழ்கின்றது.
இவர்களோடு விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது நல்வாழ்த்துகள்.

Tuesday, 1 September 2015

மலரும் நினைவுகள் - இயக்குனர் சுசீந்திரனுடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு - ஆ.வர்க்கீஸ்


2014 நவம்பர் நம் குடும்பத்தில் வெளிவந்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் நேர்காணல்
         சமூக அக்கறையுள்ள பல்வேறு துறை சார்ந்தவர்களையும் பேட்டி கண்டு அதை நம் குடும்பத்தில் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த மாதம், தன் மாறுபட்ட படைப்புகளால், வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் இடம் பிடித்துள்ள, சமுதாய சிந்தனை மிக்க இயக்குனர் சசீந்திரன் அவர்களின் பேட்டி இடம் பெறுகிறது. தமிழ்த்திரை உலகில் புதியவர்கள் கோலோச்சும் காலமிது. வெண்ணிலா கபடிக்குழு வெளியானபோது இயக்குனர் சுசீந்திரனும் புதியவர்தான். கபடி விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கிராம இளைஞர்களின் வாழ்வியலை - திரைமுயற்சி என்பதைத்தாண்டி - உள்ளது உள்ளபடியே அப்படம் காட்சிப்படுத்தி இருக்கும். அவ்வகையில் அறிமுக முயற்சியிலேயே நம் கவனம் ஈர்த்த இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார் சுசீந்திரன்.
எழுத்தாளர் பாஸ்கர்சக்தியின் சிறுகதையான அழகர்சாமியின் குதிரைதான் தனது முதல் படைப்பாக இருக்க வேண்டும் எனும் கனவுடன் திரைத்துறைக்குள் நுழைந்த சுசீந்திரனுக்கு அது மூன்றாவது படமாக அமைந்துபோனதில் கொஞ்சம் வருத்தமுண்டு. எனினும் தனது முதல் இரண்டு படங்களின் சாயலற்று முற்றிலும் புதுத்தளத்தில் அழகர்சாமியின் குதிரையை அவர் படமாக்கியிருப்பார். அப்புக்குட்டி எனும் அற்புதக்கலைஞனை அறிமுகப்படுத்திய அப்படம் தேசிய விருதும் பெற்றது. ஒரு மத்தியதர நகர இளைஞனின் வாழ்வைத் திரைக்கதையாகக் கொண்ட நான் மகான் அல்ல படம் சுசீந்திரனின் கிராமத்துக்களம் தாண்டிய பரிமாணத்தை நாமறிந்து கொள்ள உதவியது. யுவன்சங்கர் ராஜாவின் மாறுபட்ட இசையமைப்பும், தேர்ந்த மெல்லிசைப் பாடல்களும் (உதாரணம்: இறகைப் போல..) அப்படத்தை விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பேசவைத்தன.
நேர்த்தியற்ற வணிகத் திரைப்படங்களைக் கொடுத்துவிட்டு அவற்றை தனது வியாக்கியானங்களால் ஈடுகட்ட முனையும் இயக்குனர்களுக்கு மத்தியில் ராஜபாட்டையின் தோல்வியை மனதார ஏற்றுக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டவர் சுசீந்திரன். மிகச்சிறந்த நடிகரும், இயக்குனரும் கைகோர்த்த போதும் திரைக்கதை சரியாக அமையாததால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ராஜபாட்டைக்குப் பின் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டத்தில் சுசீந்திரன் இயக்கிய படம் ஆதலால் காதல் செய்வீர். சமகால இளம்பருவத்தினரின் காதலைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கும் அப்படத்தின் இறுதிக்காட்சியை அனைத்து ஊடகங்களும் கொண்டாடித் தீர்த்தன. காதல் பற்றிய புதுமுறையிலான விவாதத்தைத் துவங்கி வைத்ததோடு, இன்றைய இளவயதுக் காதலர்களின் சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறது இப்படம். ஆதலால் காதல் செய்வீரைத் தொடர்ந்து பாண்டிய நாடு படப்பிடிப்பில் இரவு‡பகல் பாராது ஈடுபட்டிருந்த சுசீந்திரனை நம் குடும்பம் இதழுக்காகச் சந்திக்க முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டோம். மகிழ்வோடு ஒப்புக் கொண்டு தன் அலுவலகத்திற்கு வரச் சொன்னார். சிலுசிலுவென்று மழை தூறிக் கொண்டிருந்த நண்பகல் நேரம் ஒன்றில் அவர் அலுவலகம் சென்றோம். நெருங்கிய நண்பனைப் போன்று நம்மை வரவேற்ற அவரின் இயல்பை ரசித்துக் கொண்டே அவருடனான பேச்சைத் துவங்கினோம்.
""பணம்தான் வாழ்வின் அடிப்படையா?'' என்ற நம் முதல் கேள்வியைச் சிரித்துக் கொண்டே எதிர்கொண்ட சுசீந்திரன், ""பணம் அவசியமா? இல்லையா? என்று கேட்டால் யாரும் அவசியமில்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் யாருக்காக, எதற்காக பணம் சம்பாதிக்க ஓடுகிறோம் என்பதை ஒரு நிமிடம் நின்று சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திப்பவர்களால் மட்டுமே நேர்மையான வழியில் முழு ஈடுபாட்டோடு ஓட முடியும். மேலும், யாருக்காக சம்பாதிக்கிறோமோ அவர்களிடம் முழுமையாக அதைக் கொண்டு சேர்க்கவும் முடியும். நமது இந்த ஓட்டம் நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் மனநிம்மதியைத் தருகிறதா? என்ற சுயபரிசோதனைக்கு நம்மை நாமே அடிக்கடி உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது இந்த மாதிரியான மனச் சோர்வுகள் ஏற்படாது. முன்னிலும் சிறப்பாக ஓடவும் முடியும். ஆனால் இப்படி நிதானித்து ஓடுபவர்கள் வெகு அரிதாக இருப்பதுதான் தற்போதைய குடும்பங்களின் முன் உள்ள மிக முக்கிய பிரச்சனை'' என்ற தன் நீண்ட விளக்கத்தோடு முத்தாய்ப்பாக முடித்தார்.
""நாகரிக காலகட்டத்தில் மனிதாபிமானம் சாத்தியம் என நினைக்கிறீர்களா?'' என்று கேள்வியை முடிக்கும் முன்னரே, ""இல்லை. ஏனெனில் மனிதாபிமானம் என்பது 99 சதவீதம் மறைந்துவிட்டது. மீதி ஒரு சதவீத மனிதனையும் இந்த உலகம் பிழைக்கத் தெரியாதவன் என்ற முத்திரையோடு ஒதுக்கித் தள்ளி விட்டுவிட்டது. இயல்பாக இருக்க வேண்டிய மனிதாபிமானத்தை நாம் கற்றுத் தரவும் தவறி விட்டோம். இதை வீட்டிலும், கல்விக்கூடங்களிலும் கற்றுத் தர வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில் இப்படி ஒன்று இருப்பதையே நம் அடுத்த தலைமுறையினர் அறிய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தவறு நம்மிடத்தில்தான். எதுவாகிலும், நம்மிடத்தில் இருந்தால் தானே நம் தலைமுறையினரிடமும் அது இருக்கும்.'' என ஆதங்கப்பட்டார். ""இன்றைய இளைஞர்கள் மேல்நாடுகள் மீது கொண்டுள்ள மோகத்தை நீங்க எப்படி பார்க்குறீங்க?'' எனும் நம் அடுத்த கேள்விக்கு, ""பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் என்ற பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.
மனிதன் முதலில் இயற்கையிடமிருந்து காப்பி அடித்தான். நாகரிகம் உருவான காலத்தில் ஒரு பகுதியைச் சேர்ந்தவன் இன்னொரு பகுதியைச் சேர்ந்தவனிடம் சில விசயங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டான். இப்படி ஆரம்பித்து வளர்ந்த காப்பி அடிக்கும் பழக்கம் இன்றும் தொடர்கதையாகிறது அவ்வளவே. இதில் நம் சூழ்நிலைக்கும், உடலுக்கும் ஏற்புடையதைச் சரியாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். இதில் தவறும் பட்சத்தில்தான் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் மீடியாக்களின் பங்களிப்பு மிக அவசியம். ஏனெனில் மீடியாவில் வரும் அனைத்தும் உண்மை என்று நம்புகிறவர்களின் சதவீதம் அதிகம். எனவே மீடியாக்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கற்றுத் தரத் தவறக்கூடாது''
""சினிமாவை உண்மையாய் நேசிப்பவர்களால் கோடம்பாக்கத்தில் தாக்குப்பிடிக்க முடியாதுன்னு ஒரு கருத்து நிலவுதே?'' என நம்முடைய உரையாடலின் போக்கை சினிமா பக்கம் திருப்பினோம். சிறிதுநேரம் யோசித்தபடி இருந்தவர், ""ஒரு குழந்தையிடம் நாம் உண்மையான அன்பு செலுத்தும்போது அதுவும் நம்மிடம் மிகச்சிறந்த அன்பை வெளிப்படுத்தும்.
அப்படி இருந்தும் அக்குழந்தை நம்மிடம் அன்பு செலுத்த மறுத்தால் நம்மிடம் ஏதோ உண்மைக் குறைவு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல சினிமா மீது உண்மையான அன்பு செலுத்தக் கூடிய யாரையும் தமிழ் சினிமா புறக்கணித்ததே கிடையாது. அப்படியும் வெளியேற்றப்பட்டால் அவரிடம் சினிமா மீதான காதல் குறைபாடு அல்லது உண்மையான திறமைகள் இல்லை என்றுதான் அர்த்தம். நிலைத்து நிற்க நாம் செய்ய வேண்டிய போராட்டம் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். அதன் வடிவத்திலும், அளவிலும், கால அளவிலும் வேண்டுமானால் வேறுபடலாம்.'’
""ஆதலால் காதல் செய்வீர் உண்மைச் சம்பவமா? என்று கேட்டதற்கு, ""இது கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி எல்லா பகுதிகளிலும், நம் வீடுகளிலும், வீட்டைச்சுற்றியும் நிகழும் நிகழ்வுகளே'' என்று முடித்தார்.
""விடலைப்பருவக் காதலை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?'' எனக் கேட்டபோது, ""ஆண், பெண் ஈர்ப்பும், நெருங்கிப் பழக கிடைக்கும் வாய்ப்புகளுமே இதற்குக் காரணம். இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு வரை பையன்களோ, பெண்களோ தலைகுனிந்து நடந்த காலம் இன்று மாறி விட்டது. பள்ளிகளில் ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களில் யாரோ இருவர் காதலிப்பதே அபூர்வம். ஆனால் இன்று காதலிக்காத மாணவர்களே இருவராகத்தான் இருக்கின்றார்கள். மேலும் காதலிப்பவர்களின் வயதும் குறைந்து வருகிறது. இதில் எத்தனை சதவீதம் பேரின் காதல் திருமணத்தில் முடிகின்ற சாத்தியக்கூறு இருக்கின்றது? பெண்களின் முகத்தைப் பார்த்துப் பேசி வந்த காலம் மாறி, இன்று மார்பைப் பார்த்த பிறகே முகத்தைப் பார்க்கின்றனர். அந்த அளவுக்கு நாகரிகம் என்ற பெயரில் பெண்களின் உடையும் மாறி விட்டது.'' என ஆதங்கப்பட்டார்.
""விடலைப்பருவ காதலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பெற்றோரும் ஒரு வகையில் காரணம்தானே'' நம் கேள்வியை முடிக்கும் முன்னே, ""பெற்றோரைக் குறை சொல்வதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில், பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்பதில் அவர்களைவிட அதிகமாக வேறு யாருக்கும் அக்கறை இருக்கவே முடியாது. தற்போதைய காலச்சூழலில் பணம் பிரதானமாகிவிட்டது. ஒரு குழந்தையை வளர்த்து, படிக்க வைத்து வேலை வாங்கித் தரவே பல லட்சங்களை செலவிட வேண்டியுள்ளதால், பணம் சம்பாதிப்பதில் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட வேண்டியுள்ளது. இதனால் பெற்றோருக்கு தன் குழந்தைகள் மீது முழு கவனமும் செலுத்த முடிவதில்லை. அவ்வளவே.''
""இக்காலத்தில் விவாகரத்துகள் அதிகரிச்சுட்டு வருதே?'' என நாம் கேட்டோம் ""வயது வந்துவிட்டது, போனா திரும்பி வராது என்று தான் நாம் திருமணம் செய்து கொள்கிறோம். அதே எண்ணத்தில்தான் நம் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். அப்போ செக்ஸ் அல்லது குழந்தை பெத்துக் கொள்வது மட்டுமா வாழ்க்கை? எந்தக் குடும்பத்திலாவது நம் பிள்ளைகளை உட்கார வைத்துப் பேசுகிறோமா? அவர்களுக்கு பணம், செக்ஸ் இவற்றைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று புரிய வைக்கிறோமா? இல்லையே. இதனால்தான் இத்தனை விவாகரத்துக்கள்.'' எனும் அவர் பதிலில் வாழ்வின் பக்குவம் தெரிந்தது.
""நம் சமூகத்திற்கான பங்களிப்பா நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதுமே, ""எந்த ஒரு மனிதருமே, யாருக்கும் தீமை செய்யாமல், பிறர் மனம் வருந்தும்படி இல்லாமல், நேர்மையாக வாழ்வதே சமூகத்திற்கு அவன் செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாக இருக்க முடியும்.
இப்படித்தான் நானும் வாழ முற்பட்டுக் கொண்டிருக்கிறேன். சில சூழ்நிலைகளில் நான் கோபப்பட நேர்ந்தாலும், பிறகு மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டேன். என்னைச் சார்ந்துள்ள என் குடும்பம், என் உடன் உழைப்பாளிகள், என் உதவி இயக்குனர்கள், உதவியாளர்கள் போன்றோரிடம் கோபப்படாமல், அவர்களின் தேவைகளைக் கவனித்து, அன்பு செலுத்துவதே சமூகத்திற்கு நான் செய்யும் பங்களிப்பு'' என்றார்.’
""கிராமத்துல வாழ்ந்த உங்களுக்கு சென்னை வாழ்க்கை பிடிச்சிருக்கா?'' ""கிராமத்தில் எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. நின்று நிதானித்து சிந்திக்கக்கூடிய வாய்ப்பு சென்னைக்கு வந்த பிறகே கிடைத்தது. அதுவரையில் கிராமத்தில் ஓய்வின்றி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த நான் தனிமையில் ஒரு அறையில் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தது சென்னைக்கு வந்த பிறகே. சென்னையில் நம்மைச் சுற்றிய இந்த பரபரப்பு எதுவுமே இன்றி இயல்பாக வாழக் கூடிய மனிதர்கள் பலரை எனக்குத் தெரியும்''. பதில் தரும்போது அவர் கண்களில் கிராமத்துப் பசுமையின் உற்சாகம் பளிச்சிட்டது.
""குடும்ப வாழ்வில் சுசீந்திரன் எப்படி?'' எனக் கேட்டதும் முந்தைய கேள்வியின் உற்சாகத்தோடு துவங்கினார். ""நாம் எந்த இடத்தில் இருந்தாலும், உண்மையாக, முழு மனதோடு இருந்தால் இந்தக் கேள்விக்கு இடமே இருக்காது. குடும்பம், தொழில் இரண்டிலுமே எல்லாம் கலந்திருக்கும். ஆதலால் குறிப்பிட்டு இதுதான் மனமகிழ்ச்சியைத் தரும் என்று கூறிவிட முடியாது. இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. எனக்கு இரண்டுமே மகிழ்ச்சியைத் தான் தருகிறது. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்'' எனும் அவரின் பார்வை ஒவ்வொரு குடும்பத் தலைவருக்குமான அவசியத் தெளிவு.
இயக்குனர் சுசீந்தரனுடன் இருந்த நாற்பத்தைந்து நிமிடங்களும் ஒரு தத்துவ வகுப்பில் இருந்ததைப் போன்று கழிந்தன. நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி சொன்னோம். வழியனுப்ப வாசல்வரை வந்த அவரின் கண்களில் அள்ளக்குறையாத அன்பு. நெகிழ்ந்தபடியே அங்கிருந்து திரும்பினோம்.

Monday, 31 August 2015

ஒய்ஸ்மென் கிளப், சத்தியமங்கலம்

நேற்று மாலை ஒய்ஸ்மென் கிளப், சத்தியமங்கலம் கிளையில் நம் குடும்பம் என்ற தலைப்பில் நமது ஆசிரியர் திரு,வர்க்கீஸ் அவர்கள் உரையாற்றினார். நம் இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பேச வாய்ப்பளித்த கிளப்பின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பு பெற்றுத் தந்த நம் குடும்பத்தின் முதன்மை புரவலர்கள் திரு.வேலுச்சாமி மற்றும் திருமதி. நந்தினி வேலுச்சாமி தம்பதியருக்கு எமது முதன்மை நன்றிகள். இடையறா பணிகளுக்கு மத்தியிலும் சமூகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்கிச் செயல்படும் ஒய்ஸ்மென் கிளப் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் நம் குடும்பத்தின் உளப்பூர்வமான வாழ்த்துகளும், பாரட்டுதல்களும்.


Sunday, 30 August 2015

ஒடுக்குதலில் வளர்ந்த ஆலமரம்

நம் குடும்பம் ஜூலை மாத இதழில் முன்னுதாரண முகங்கள் பகுதியில் இடம் பெற்ற ரீடு கருப்புசாமி அவர்களின் சிறப்புப் பேட்டி.

               இளம் தலைமுறையினரின் புதிய ஆரோக்கியமான சிந்தனைகளும், சமூகத்தின் அனுபவமிக்கவர்களால் காட்டப்படுகின்ற சிறந்த வழிகாட்டுதல்களும் ஒத்திசைவு பெருமானால் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான பாதை மிக எளிதாகத் திறக்கப்படும். எல்லா அறிவுஜீவிகளும் சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்களா? என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகின்றது. ஆனால் இவர்களிடமிருந்து நல்ல சமூக சிந்தனையாளர்கள் உருவாகின்றபோதுதான் அதன் வீரியமும் வீச்சும் அதிகமாக இருக்கும். ஆகவே புதிய சிந்தனையாளர்களை இனங்கண்டு, குன்றிலிட்ட விளக்காக ஒளிரச் செய்வது நம் சமூகக் கடமை என நம் குடும்பம் நம்புகிறது.
               இதனால் அவர்களது பணி வாழ்வின் எல்லை விரிவுபடுத்தப்படுவதோடு, அவர்களது வீரியம் இன்னும் பல குடும்பங்களுக்கு ஒளியாகவும் அமையும். ஆதலால் சமூக மாற்றத்தை விரும்பி, அதையே தனது வாழ்வாகத் தேர்ந்து கொண்ட சமூகச் சிந்தனையாளர்களை நம் குடும்ப வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம். அவ்வகையில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, தன் இனத்திற்கு மட்டுமல்ல தான் சார்ந்த மண்ணுக்காகவும் போராடி வருபவரான ரீடு கருப்புசாமி எனப் பெரும்பாலும் அறியப்படுகின்ற ஆர்.கருப்புசாமி அவர்களைச் சந்தித்தோம்.
               ஒரு பரபரப்பான காலை வேளையில் அவரது அலுவலகம் சென்ற எங்களை இன்முகத்தோடு வரவேற்றார் ரீடு இயக்குனர் ஆர்.கருப்புசாமி அவர்கள். நீண்ட நாட்களுக்கு முன் சந்தித்திருந்தாலும், அதை ஞாபகப்படுத்தி அவர் நலம் விசாரித்தது, மனதைத் தொடுவதாக அமைந்தது. சமூகத்தைப் படி சமத்துவம் பெறு என்ற ரீடு (READ Rights Education And Development centre)  அமைப்பின் லோகோவில் இருந்த அழிக்கவியலா உண்மையை உணர்ந்தவர்களாக பேச்சைத் துவக்கினோம்.
ரீடு எனும் ஆலமரத்தின் வேர் நீங்கள். உங்களுக்குள் எப்படி இப்படி ஒரு விதை விழுந்தது என்ற எங்கள் ஆச்சர்ய கேள்விக்கு வழக்கமான தன் புன்னகையோடு, நான் விடுதியில் தங்கிப் படித்த ஒரு அரசுப் பள்ளி மாணவன். அப்பொழுது எங்கள் விடுதிக்கு வரும் பல்வேறு சமூக சிந்தனையாளர்கள், அடக்குமுறைகள் மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் பேசியப் பேச்சுக்களே எனக்குள் விழுந்த விதைகள் எனச் சொல்லலாம். விடுமுறையில் என் தாய் தந்தையைப் பார்க்கச் செல்லும் போது, உயர் வகுப்பினர் என் பெற்றோரையும், நான் சார்ந்த சமூகத்தையும் நடத்தும் அவலத்தைக் காண நேர்ந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல பல சம்பவங்களைச் சொல்லலாம். இந்த மோசமான சம்பவங்களும், அனுபவங்களுமே எனக்குள் விழுந்த விதைகள் முளைத்துத் துளிர் விட்டு வளர நீர் வார்த்ததாக அமைந்து விட்டது. நான் வளர்ந்து பெரியவன் ஆனவுடன் என் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வேன். அதுவே இப்பொழுது ரீடு என்னும் அமைப்பாக வளர்ந்துள்ளது என முடித்த அவரது பேச்சில் அவர் கொண்ட மன வைராக்கியத்தின் அளக்க முடியா ஆழம் தெரிந்தது.
               ஆரம்பத்தில் என்ன மாதிரி செயல்திட்டங்களை நீங்கள் வகுத்துக் கொண்டீர்கள்? என்ற நம் அடுத்தக் கேள்வியை ஆர்வத்தோடு எதிர்கொண்டவர், மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் என்றே உளவியளாலர்கள் கருதுகின்றனர். எனவே, சமூகத்தில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட கல்வி என்பது மிக மிக அவசியம். இதை எனது சொந்த அனுபவங்களால் பெற்றிருந்த நான் சமூகத்தால் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களைக் கல்வி அறிவு பெறச் செய்வதிலேயே எங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தினோம். இன்றும் எங்களது முக்கியமான பணியே கடைநிலை மக்களுக்கும் கல்வி என்பதே. இதற்காக, பல்வேறு அரசு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய இயக்கங்களோடு கரம் கோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம்.
               உங்களது செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட சமூக நலன் சார்ந்ததா? அல்லது பொதுவானதா? என்ற எங்கள் கேள்விக்கு, இல்லை.. இல்லை என அவசரமாக மறுத்த அவர் ஒடுக்கப்படும் மக்களுக்காக உழைப்பதே எங்கள் அமைப்பின் நோக்கம். அடக்குமுறை மற்றும் தனிமனித விதி மீறல்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அவ்விடங்களில் களப்பணியாற்றி பாதிக்கப்படுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். உதாரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், தனியார் பள்ளியில் கட்டண பாக்கி என்பதால், பள்ளி மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்பட்ட உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனின் விதவைத் தாய் எங்களை அணுகியபோது, உடனடியாக நாங்கள் செயல்பட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அம்மாணவனை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆவன செய்தோம் என்று முத்தாய்ப்பாய் முடித்தார்.
                பொதுவாக, கல்விப் பணி போக வேறு என்ன மாதிரி பணிகள் செய்து வருகின்றீர்கள்? என்ற நம் அடுத்தக் கேள்விக்கு, மகளிர் மேம்பாடு. இதற்காக, சாக்கியர் பெண்கள் சொசைட்டி என்ற தனிக் கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அதைச் சுயமாகச் செயல்படும்படியாகவும் அமைத்துள்ளோம். இவ்வமைப்பு பெண்கள் சுயமுன்னேற்றத்திற்கான அமைப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் விடியல் என்ற அமைப்பு எங்களது ஆலோசனையின் கீழ் செயல்பட்டு வருகின்றது. மலை வாழ் மக்கள் மேம்பாடு, கொத்தடிமை ஒழிப்பு, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராகப் போராடுதல், பெண் கல்வியின் அவசிய விழிப்புணர்வுப் பிரச்சாரம், அரசுத் துறைகளில் ஏழை, எளியவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத் தருதல், உயர் படிப்பிற்கு உதவுதல், பல்வேறு அரசுத் திட்டங்களை மக்களுக்கு விளக்கிச் சொல்லுதல், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையை ஒழித்தல் போன்ற பல்வேறு பணிகளை ரீடு அமைப்புச் செய்து வருகின்றது என்ற அவரது பேச்சில் சாதித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் பேரார்வம் தெரிந்தது.
               துவக்க காலத்தில் உங்கள் குடும்பத்தில் உங்களுக்கான ஒத்துழைப்பு.. என்று நம் கேள்வியில் தெரிந்த, சமூகப் போராளிகளுக்கு வெளியில் ஆதரவு கிடைத்தாலும், உள்ளூரில் அதுவும் சொந்த வீட்டில் துளியும் ஆதரவு கிடைக்காது என்ற கருத்தின் தொனியை உணர்ந்து கொண்டவராக ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்தன. உயர் வகுப்பினர் செய்யும் தீண்டாமைச் செயல்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததோடு, என் பெற்றோரையும் இதற்கு எதிராக செயல்படத் தூண்டியபோது, இவனைப் படிக்க வைத்ததே தவறு என்று என் பெற்றோர்கள் நினைக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டனர். பின்னர் அவர்களும் புரிந்து கொண்டு என்னோடு கரம் கோர்த்துக் கொண்டார்கள். இன்று பல்வேறு வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில்கூட கலந்து கொண்டு நான் உரையாற்றும் ஒவ்வொரு தருணங்களுமே என் வீட்டார் என் மாற்றுச் சிந்தனைகளை ஏற்றுக் கொண்டதன் விளைவுதான். ஏனெனில், தன் முதுகில் உள்ள அழுக்கை எடுக்காதவரை அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கைப் பற்றிப் பேச மட்டுமல்ல சிந்திக்கக் கூடக் கூடாது என்ற அடிப்படையில் இயங்குபவன் நான் என்ற அவரது பதிலில் பக்குவம் தெரிந்தது.
               உங்கள் சமூகச்சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கு உங்கள் இல்லறத் துணையின் ஒத்துழைப்பு எந்த அளவில் இருந்தது என்ற நமது கேள்விக்கு, ரீடு அமைப்பு துவக்கப்பட்டதே எனது திருமணத்திற்குப் பிறகுதான். வருமானம் சிறிதும் இல்லா நிலைமையில், சமூக விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்ட எனக்கு, குடும்பம் ஒரு சுமையாகி விடக்கூடாது என்பதில் என் மனைவி அதிகக் கவனம் செலுத்தினார். சொல்லப் போனால் குடும்பச் சுமையை அடிக்கடி சொல்லிப் பயமுறுத்தும் மனைவியாக இல்லாமல், என் செயல்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அவரிடமிருந்து கிடைத்தது. எனது பயணத்திற்கு குடும்பம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டதோடு, எனக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார் என்றார் உணர்ச்சி மிகுந்தவராக.
               ரீடு அமைப்பின் இயக்குனர் ‡ ஒரு குடும்பத்தின் தலைவர் இந்த இரண்டில் உங்களை மிகவும் கவர்ந்தது எது? என்ற நமது இறுதிக் கேள்விக்கு, சமூகச் சிந்தனை என்பது என் சிறுவயதில் விழுந்த விதை. அது மரமாக வளர்ந்து, அதன் நிழலில் பல்வேறு குடும்பங்கள் இன்று வாழ்கின்றன. எனது குடும்பம் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடங்கியது கிடையாது. ரீடு அமைப்பின் உடன் உழைப்பாளிகள், பயனாளிகள், ஆதரவாளர்கள் இவர்கள் அனைவருமே எனது குடும்பத்தின் அங்கத்தினர்களே. ஆதலால் இது எனது குடும்பம், இது நான் பணியாற்றும் அலுவலகம் என சராசரி மனிதரைப் போல என்னால் பிரித்துப் பார்க்க முடியாது. எனக்கு இரண்டுமே மகிழ்ச்சியைத்தான் தருகின்றது. பிறரது உணர்ச்சிகளுக்கு இடமளித்து, அவர்களையும் மதித்து செயல்படும்போது அவர்களும் நம் உறவுகளாகத்தான் தெரிவார்கள். இவரது இந்தப் பார்வை ஒவ்வொரு மனிதருக்கும் அமைய வேண்டிய அவசியமான பார்வை.
               ரீடு அமைப்பின் இயக்குனர் ஆர்.கருப்புசாமியோடு உரையாற்றிய அந்த முப்பது நிமிடங்களும், யதார்த்த வாழ்வின் அவசியத்தை, உணர்த்தும் தருணங்களாகவே கழிந்தன. நன்றி கூறி விடைபெற்றோம். பிரதான வாயில் வரை வழியனுப்ப வந்த அவரிடம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவரைச் சந்திப்பதற்காக மேல்தளத்தில் காத்துக் கொண்டிருப்பதாக உதவியாளர் தெரிவிக்க, அன்பு கலந்த பார்வையோடும், நெகிழ்ச்சியோடும் விடைகொடுத்து மேல் தளத்திற்கு விரைந்தார்.
               இறுக்கமான சிந்தனைகளும், ஒடுக்கமான பார்வைகளும் நவீன சமூக எழுச்சிக்குத் தடைக்கற்களாக அமையும். அவ்வாறின்றி பரந்துபட்ட சிந்தனைகளும் விரிவுபட்ட ஆய்வுகளுமே நவீன சமூக எழுச்சிக்கு முதுகெலும்பாக அமையும் என்ற தெளிவு பெற்றவர்களாக அங்கிருந்து திரும்பினோம்.

நூல் அறிமுகம்


அன்பு உறவுகளே,
நீங்களும் உங்கள் நூலை நம் குடும்பம் வழியாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பினால் உங்கள் நூலின் இரண்டு பிரதிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நம் குடும்பம்,
159/5, அமல அன்னை வணிக வளாகம்,
புதிய மார்க்கெட் எதிரில்,
அத்தாணி ரோடு,
சத்தியமங்கலம் ‡ 638 401
ஈரோடு மாவட்டம்.
90035 54227.

Saturday, 29 August 2015

வாட்ஸ் அப்-ல் வந்தவை

அன்பு நம் குடும்ப உறவுகளே, உங்களைச் சுற்றி நடக்கும் மேன்மையான குடும்ப உறவுகளின் (சிறார் முதல் பெரியவர்கள் வரையிலான)பதிவுகள், உறவுச் சிக்கல்கள், ஆழ் மன உணர்வுகள், மனதைப் பாதித்த குடும்பங்கள் தொடர்பான சம்பவங்கள் மற்றும் மனித உணர்ச்சிகள் தொடர்பான உங்கள் படைப்புகளை (அரசியல், மாதம், ஆபாசம் தவிர்த்து) நம் குடும்பம் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். சிறந்த படைப்புகள் நம் குடும்பத்தில் பிரசுரிக்கப்படும். நீங்களும் உங்கள் படைப்புகள் மூலம் உன்னத உணர்வாளராகவோ (சுய படைப்புகளுக்கு மட்டும்), பங்கேற்பாளராகவோ தேர்ந்தெடுக்கப்பட வாழ்த்துகிறோம் -ஆசிரியர் குழு.


ஒருசில பழைய இதழ்களின் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

அன்பு உறவுகளே, நம் குடும்பத்தின் 22வது இதழ் விரைவில் உங்கள் கரங்களில் இருக்கும். இந்த நல்ல நேரத்தில் நம் குடும்பத்தின் ஒருசில பழைய இதழ்களின் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..


Online-ல் நம் குடும்பம்

அன்பு நம் குடும்ப உறவுகளுக்கு வணக்கங்கள். நமது நம் குடும்பம் இதழானது முன்னணி இணைய நூல் விற்பனை அங்காடி பனுவல்-ல் கிடைக்கும். பெற்று மகிழுங்கள். உங்கள் இல்லறங்கள் நல்இல்லறங்களாக வாழ்த்துகிறோம்.


செப்டம்பர் இதழின் சிறப்பு படைபாளர் மற்றும் சிறப்புப் பேட்டி


 

Friday, 28 August 2015

நம் குடும்பம் செப்டம்பர் மாத இதழுக்கு பங்களிப்பு செய்த படைப்பாளர்கள்


செப்டம்பர் மாத இதழின் அட்டைப் படம்


அன்பு நம் குடும்ப உறவுகளுக்கு, வணக்கங்கள்.


செப்டம்பர் மாத இதழின் அட்டைப் படம் உங்கள் பார்வைக்காக. இதழ் விரைவில் உங்கள் கரங்களில் இருக்கும். சந்தா மூலம் நம் குடும்பம் உறவில் கலக்காதவர்களுக்கு,
நம் குடும்பம் சந்தா விபரங்கள்
ஒர் ஆண்டு ரூ.120.00
இராண்டு ரூ. 220.00
மூன்றாண்டு ரூ. 320.00
ஐந்தாண்டு ரூ. 500.00
ஆயுள் சந்தா ரூ. 3,000.00
மணியார்டர் அனுப்பும் முகவரி
நம் குடும்பம்,
159/5, அமல அன்னை வணிக வளாகம்,
புதிய மார்க்கெட் எதிரில்,
அத்தாணி ரோடு,
சத்தியமங்கலம். 638 401
ஈரோடு மாவட்டம்.
வங்கி வழியாக சந்தா செலுத்த
வங்கிக் கணக்கு எண்: 824510110001920
பெயர்: A.Vargees
வங்கி: பேங்க் ஆப் இண்டியா
கிளை: சத்தியமங்கலம்
IFSC Code: BKID0008245
உங்கள் இல்லறங்கள் நல்லறங்களாக ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துகிறேன்
நன்றிகளுடன்
ஆ.வர்க்கீஸ்,
ஆசிரியர்,
நம் குடும்பம் மாத இதழ்
+91 9003554227
editor.nkm@gmail.comவாட்ஸ் அப்நம் குடும்ப உறவுகளுக்கு, காலை வணக்கங்கள். வாட்ஸ் அப்பில் வந்தவை எனும் தலைப்பில் நம் குடும்பம் இதழில் பிரத்தியேகமாக இரண்டு பக்கங்கள் ஒதுக்கியுள்ளோம். குடும்ப உறவுகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த உங்களின் ஆகச் சிறந்த படைப்புகள் மற்றும் பகிர்வுகளை நம் குடும்பம் இதழில் செப்டம்பர் மாதம் முதல் வெளியிடுகிறோம். இந்த நல்வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள அன்போடு அழைக்கிறேன்.
இந்த இதழில் திருமதி.யத்விகா கார்த்திக்-துபாய், திரு.அரசு தாமசு-கோபிச்செட்டிபாளையம், திரு.நாகராஜன்-காஞ்சிபுரம், திரு.ஸ்டீபன் முடியரசு-வஞ்சிபாளையம், திரு.ராம்குமார்-லால்குடி ஆகியோரது பகிர்வுகள் இடம் பெறுகின்றன. நல்வாழ்த்துகள்.
உங்கள் பகிர்வுகள் அரசு தாமசு ஐயா அவர்களைப் போன்று சுய எண்ணங்கள் மற்றும் சமுதாயத் தாக்கங்களின் விளைவுகளாக இருந்தால் இன்னும் நலமாக இருக்கும். தொடர்ந்து நம் குடும்பத்தோடு பயணிக்கும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அகக்கண்

நம் குடும்பம் மே மாத இதழில் இடம்பெற்ற (சூழலியல் விழிப்புணர்வு) அகக்கண் பகுதி


Tuesday, 21 July 2015

ஆகஸ்ட் மாத நம் குடும்பம் இதழில்..


பழம் பாடல் பகுதியில் என்.சொக்கன் எழுதிய மெல்லினங்கள் பேசு கண்ணே.., தலையங்கம் பகுதியில் யூஸ் அன்ட் த்ரோ குழந்தைகள், நேர்ப்பார்வை பகுதியில் ஜெயமோகன் எழுதிய தந்தைமை, மென்தூறல் பகுதியில் என் மனசு சதீஷ்குமார் எழுதிய மழைக்காலம், மெய்ப்பொருள் பகுதியில் தி.கு.இரவிச்சந்திரன் எழுதிய உடைமை எனும் மடமை, போதிமரம் பகுதியில் வாழும் வழி, சொல்வெளி பகுதியில் உலகப் பழமொழிகள் வரிசையில் - அமெரிக்கா, க(வி)தை பகுதியில் (கவி இளவல் தமிழ்) அரவிந்த் எழுதிய வாசம் தொலைத்த மல்லிகைகள், உணவே மருந்து பகுதியில் இயற்கையின் திருமகள்.நா.நாச்சாள் எழுதிய காற்றே உணவாக.. முன்னுதாரண முகங்கள் பகுதியில் மெழுகாய் உருகும் தாய்மை - சேலம் தேவி அவர்களின் பேட்டி, மனம் மனமறிய ஆவல் பகுதியில் சிவ.கதிரவன் எழுதிய மனதை அறி; நோயை விரட்டு,
மகரந்தத்தூள்களை சிறகுகளாக மனதில் விரிக்கும் மாயக்கவிஞன் பழநி பாரதி அவர்களின் பேட்டி, மாதம் ஒரு மரம் பகுதியில் கீ.ச.திலீபன் எழுதிய இயற்கையின் வயாகரா, நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள் பகுதியில் மதேஸ்வரன் எழுதிய சிலம்பம், கேப்டன் யாசீன் எழுதிய நிறம் சார்ந்ததல்ல அழகு, சிறுகதை பகுதியில் சந்திரா மனோகரன் எழுதிய புரிதல், மரபுக்கவிதை பகுதியில் இளமுகிலன் எழுதிய பாசக்கடல், ஊஞ்சல் பலகை பகுதியில் கே.கே.முருகானந்தம் எழுதிய பெண் என்பவள்.., கிச்சு கிச்சு பகுதியில் ஜோக்கரசு எழுதிய சிரிப்பு வெடிகள், மரபுக்கவிதை பகுதியில் தமிழ்நெஞ்சம் அமின் எழுதிய பாக்கு.
விலை ரூ.10 ஆண்டு சந்தா ரூ.120.00
இதழ் வேண்டுவோர் இன் பாக்சில் தொடர்பு கொள்ளவும். or mail us to magazine.nkm@gmail.com or call - 9003554227

ஆகஸ்ட் இதழ்


நம் குடும்பம் ஆகஸ்ட் இதழ் அச்சில்..
மிக விரைவில் உங்கள் கரங்களில்..